ஏறாவூர் நகரசபையில் 2024ஆம் ஆண்டுக்கான வியாபார அனுமதிப் பத்திரங்களை பெற்றுக் கொள்வதற்காக விண்ணப்பித்த வர்த்தகர்களுக்கான (01.01.2024) அன்று அனுமதிப்பத்திரங்கள் விநியோகிக்கப்பட்டன.
வியாபார அனுமதிப்பத்திரங்களை வழங்குவதில் கடந்த காலங்களில் நிலவிய கால தாமதங்களை முற்றாக நிவர்த்தி செய்யும் வகையில் வருடத்தின் முதல் நாளிலேயே அனுமதிப்பத்திரங்கள் உரிய வர்த்தகர்களிடம் கையளிக்கப்பட்டன.
புத்தாண்டு ஆரம்ப நிகழ்வின் போது வியாபார நிலைய உரிமையாளர்கள் வரவழைக்கப்பட்டு 2024ஆம் ஆண்டுக்கான வியாபார அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டன.
இதே வேளை அனுமதிப்பத்திரங்களுக்காக முறையாக விண்ணப்பித்த வர்த்தகர்களுக்கு நகரசபை செயலாளர் எம் எச் எம் ஹமீம் தலைமையில் வருமானப் பரிசோதகர்கள் மற்றும் வட்டார உத்தியோகத்தர்கள் அடங்கிய குழுவினர் நேரடியாக வர்த்தக நிலையங்களுக்கு சென்று வியாபார அனுமதிப்பத்திரங்களை வழங்கியமை குறிப்பிடத்தக்கது.
இந்தச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇