‘அஸ்வெசும’ நலன்புரி கொடுப்பனவுகளை பெறும் குடும்பங்களின் எண்ணிக்கையை 2.4 மில்லியனாக அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்தார்.
அஸ்வெசும நலன்புரி திட்டத்தின் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து அரச வங்கிகளின் பிரதிநிதிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே நிதி இராஜாங்க அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.
குறித்த யோசனை எதிர்வரும் நாட்களில் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படும் என்றும் இராஜாங்க அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
அஸ்வெசும திட்டம் 2 மில்லியன் குடும்பங்களின் நலன்புரிக்காக உருவாக்கப்பட்டது.
தற்போது 1.4 மில்லியன் குடும்பங்கள் இதன்மூலம் நன்மைகளை பெற்று வருகின்றனர்.
மேலும், இந்த திட்டம் தொடர்பில் 1.1 மில்லியனுக்கும் அதிகமான முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன.
அதற்கான நடவடிக்கைகள் எதிர்வரும் 31 ஆம் திகதிக்கு முன்னர் எடுக்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
அஸ்வெசும கொடுப்பனவின் புதிய பயனாளர்களுக்கான விண்ணப்பம் இம்மாத இறுதியில் அல்லது பெப்ரவரி மாதம் முதல் வாரத்தில் கோரப்படும் என்றும் இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.
இந்தச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇