காடுகளில் வாழும் உயிரினங்களில் மிகவும் பலம் வாய்ந்த ஒன்று காண்டாமிருகம். சிங்கம், புலி போன்ற விலங்குகள் கூட காண்டாமிருகத்திடம் மோதுவதற்கு அச்சப்படும்.
அந்த அளவுக்கு பலம் கொண்ட காண்டாமிருகத்திடம், மான்குட்டி ஒன்று துணிச்சலுடன் மோதிய நிகழ்வு போலந்து நாட்டில் நடந்துள்ளது.
போலந்து நாட்டின் வ்ரோக்லாவ் உயிரியல் பூங்காவில் உள்ள காண்டாமிருகத்தை எதிர்த்து, மான் குட்டி ஒன்று துணிச்சலாக மோதியது.
மான்குட்டியின் துணிச்சலை மதித்து, காண்டாமிருகமும் மான்குட்டிக்கு அடி படாதவாறு அதனுடன் செல்லமாக விளையாடியது.
இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலான நிலையில், மான்குட்டியின் துணிச்சலை பலரும் பாராட்டி இணையத்தில் பதிவிட்டு வருகின்றனர்.




இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










