மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 24 மணித்தியாலங்களில் அதிக பட்ச மழையாக 174மில்லி மீற்றர் வாகனேரியில் பெய்துள்ளதுடன் வாகனேரி குளத்தில் 19.2 அடிக்கு நீர்மட்டம் அதிகரித்துள்ளதுடன், ஆறு அடி உயரத்தில் வான்கதவு திறக்கப்பட்டு நீர் வெளியேறுகின்றது. .
மயிலம்பாவெளி பிரதேசத்தில் 130மில்லி மீற்றர் மழையும், தும்பங்கேணியில் 112.0 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சியும் பதிவாகியுள்ளது.
உருகாமம் பகுதியில் 103.9 மில்லி மீற்றர் மழை பெய்து, உருகாமம் குளத்தில் 15.8 அடிக்கு நீர் மட்டம் அதிகரித்துள்ளதுடன், 28 அடி உயரத்தில் நீர் பாய்கின்றது.
இதேவேளை உன்னிச்சை பிரதேசத்தில் 102 மில்லி மீற்றர் மழை பெய்துள்ளதுடன், உன்னிச்சை குளத்தில் 33’0 அடிக்கு நீர் மட்டம் அதிகரித்திருப்பதை அவதானிக்கலாம்.
இது தவிர மட்டக்களப்பில் 99.4 மில்லி மீற்றர் மழையும், கட்டுமுறிவுக்குளத்தில் 98 மில்லி மீற்றர், பாசிக்குடா பகுதியில் 95மில்லி மீற்றரும் மழை பெய்துள்ளது.
அத்துடன் மாவட்டத்தில் குறைந்த மழை வீழ்ச்சியாக நவகிரி பிரதேசத்தில் 82.5 மில்லி மீற்றர் பதிவாகியுள்ளதுடன், புணானை அணைக்கட்டின் நீர் 10.8 அடிக்கு உயர்ந்திருப்பதுடன், கிரான் பகுதியில் எவ்வித மழை வீழ்ச்சியும் பதிவாகவில்லை என்றும் மட்டக்களப்பு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.
இந்தச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇