புனானை மற்றும் வாழைச்சேனை புகையிரத நிலையங்களுக்கு இடையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால்அன்று இரவு 07.15 மணிக்கு கொழும்பு கோட்டையிலிருந்து மட்டக்களப்பு நோக்கிச் செல்லும் இரவு அஞ்சல் ரயிலையும், மட்டக்களப்பில் இருந்து கொழும்பு கோட்டை நோக்கிச் செல்லும் அஞ்சல் புகையிரதத்தை ரத்து செய்ய புகையிரத திணைக்களம் தீர்மானித்துள்ளது.
இந்த இரண்டு ரயில்களும் (11.01.2024) அன்று இரத்து செய்யப்பட்டுள்ளதுடன் (12.01.2024) அன்று காலை 06.05 மணிக்கு கொழும்பு கோட்டை ரயில் நிலையத்தில் இருந்து மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை நோக்கி இயக்கப்படும் உதயதேவி விரைவு ரயிலையும் மட்டக்களப்பில் இருந்து கொழும்பு கோட்டை நோக்கி செல்லும் ரயிலையும் இரத்து செய்ய ரயில்வே திணைக்களம் தீர்மானித்துள்ளது.
இந்தச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇