வெள்ளம் காரணமாக தற்காலிகமாக மூடப்பட்டிருந்த பொலனறுவை – மட்டக்களப்பு பிரதான வீதியின் போக்குவரத்து மீண்டும் வழமைக்கு திரும்பியுள்ளது.
அனர்த்த முகாமைத்து நிலையம் அறிக்கையொன்றை விடுத்து, இதனைத் தெரிவித்துள்ளது.
சீரற்ற காலநிலை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தினால், பொலனறுவை – மட்டக்களப்பு பிரதான வீதியூடான போக்குவரத்து கல்லெல்ல பகுதியில் தடைப்பட்டிருந்தது.
இதேவேளை, மண்சரிவு காரணமாக பதுளை – கொழும்பு பிரதான வீதியின் போக்குவரத்து ஹாலிஎல உடுவரை பகுதியில் தொடர்ந்தும் தடைப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
இந்தச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇