நடைப்பயிற்சி செய்வதற்கு சரியான நேரம் எது?
ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்கான பட்டியலில் நடைப்பயிற்சி முக்கிய இடத்தை பெற்றுள்ளது. லோ – இம்பேக்ட் எக்சர்சைஸாக குறிப்பிடப்படும் நடைப்பயிற்சியை ஒருவர் தனது பரபரப்பான பிசி நாட்களுக்கு இடையிலும் கூட தடையின்றி ஒருங்கிணைத்து பின்பற்ற முடியும்.
அதிகாலை நேரம், விடிந்த பிறகு, மாலை அல்லது இரவு நேரம் என ஒவ்வொருவரும் தங்களுக்கு ஏதுவான நேரத்தில் நடைப்பயிற்சியை மேற்கொள்கிறார்கள். ஆனால் நடைப்பயிற்சி செல்வதால் கிடைக்கும் நன்மைகளை முழுமையாக பெற ஒரு நாளின் எந்த நேரத்தில் நடக்க வேண்டும்? காலை அல்லது மாலை வாக்கிங் செல்வதில் எது சிறந்தது? என பலரின் மனதிலும் கேள்வி எழுகிறது.
உண்மை என்னவென்றால் நடைப்பயிற்சி செல்லும் நேரத்தை பொறுத்த வரை அனைவருக்கும் பொருந்த கூடிய பதில் இல்லை. உங்கள் தினசரி நடைப்பயிற்சிக்கான சிறந்த நேரம், உங்கள் தனிப்பட்ட வேலைகள் மற்றும் நீங்கள் பின்பற்றும் வாழ்க்கை முறையை பொறுத்தது. எப்போது உங்களுக்கு நேரம் கிடைக்கிறதோ அப்போது நீங்கள் வாக்கிங் செல்வது சிறந்த பலன்களை கொடுக்கும் என்கிறார்கள் நிபுணர்கள்.
நடைப்பயிற்சி ஒரு லோ-இம்பேக்ட் உடற்பயிற்சி என்பதால் ஒருவர் தனது பரபரப்பான வேலை நாட்களிலும் கூட தனது அன்றாட வழக்கத்தில் தடையின்றி ஒருங்கிணைத்து செய்ய முடியும். ஒருவர் தான் வாக்கிங் போகும் நேரத்தை தனது வாழ்க்கை முறையுடன் ஒத்துப்போகுமாறு பார்த்து கொள்ள வேண்டுமே தவிர அது பரபரப்பான காலை அல்லது அமைதியான மாலை என எந்த நேரமாகவும் இருக்கலாம்.
நம்முடைய பாடி கிளாக் சர்க்காடியன் ரிதம் அடிப்படையில் தான் இயங்குகிறது. மதியம் இரண்டரை மணிக்கு மேல் எந்த வேலை செய்தாலும் அதற்கு அதிக தசை வலிமை (muscle strength) தேவைப்படும். “அந்த நேரத்தில்தான் நம்முடைய பாடி கிளாக், சிறந்த கோ-ஆர்டினேஷனுக்கு உதவும் மற்றும் ரெஸ்பான்ஸிவ்னஸ் மேம்பட்டு காணப்படும். மேலும், மாலை 5 மணியளவில் நம்முடைய கார்டியோ வாஸ்குலர் திறன் மற்றும் தசை வலிமை மிகச்சிறந்ததாக இருக்கும்” என்று தெரிவித்துள்ளார்.
சுற்றுச்சூழல் மாசுபாடுகளை வைத்து பார்த்தால் மாலை அல்லது இரவு நேரங்களை ஒப்பிடும்போது அதிகாலையில் மாசுபாடு குறைவாக உள்ளது. அந்த வகையில் மாலையில் நடப்பதை விட காலையில் நடைபயிற்சி செய்வது மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என கூறினார். அதே நேரம் காலை அல்லது மாலை என்று யோசிக்காமல் காலை நாள் முழுவதும் ஒரு தொடர்ச்சியான நடவடிக்கையாக நடைப்பயிற்சியை செய்ய மருத்துவர் பரிந்துரைக்கிறார். இந்த பழக்கம் தொடர்ந்து கலோரிகளை எரிப்பதை உறுதி செய்வதோடு, உடல் எடையை திறம்பட நிர்வகிக்க உதவுகிறது. நடைப்பயிற்சி ஸ்டெப்ஸ்கள் அதிகரிப்பதன் மூலம் ஆரோக்கியம் மேம்பட்டு இறப்பு அபாயம் குறையும் என்றார்.
இந்தச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇