நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தில் ஒரு கிலோ கரட் 1,000 ரூபா முதல் 1,100 ரூபா வரையிலான விலையில் விற்பனை செய்யப்பட்டுள்ளது.
இந் நிலையில் புரோக்கோலி மற்றும் ஏனைய மரக்கறிகளின் விலைகள் ஒரு கிலோ 7,000 ரூபாவாக அதிகரித்துள்ளதாக நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தின் தலைவர் அருண சாந்த ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.
இதன் பிரகாரம் ஒரு கிலோ லீக்ஸ் 400 – 500 ரூபாவாகவும் ஒரு கிலோ பீட்ரூட் 400 – 500 ரூபாவாகவும் ஒரு கிலோ கோவா 400 – 500 ரூபாவாகவும் ஒரு கிலோ போஞ்சி 750 – 800 ரூபாவாகவும் மிளகாய் தூள் பொதி ஒன்று 750 – 800 ரூபாவாகவும் ஒரு கிலோ பச்சை மிளகாய் 1,600 ரூபாவாகவும் ஒரு கிலோ முள்ளங்கி 350 ரூபாவாகவும் அதிகரித்துள்ளது.
இந்தச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇