தேசிய நீர்மான சங்கத்தின் வருடாந்த கெளரவிப்பு நிகழ்வின் ஒரு கட்டமாக மட்டக்களப்பு கிளையின் ஏற்பாட்டில் தேசிய நீர்மான சங்கத்தின் மட்டக்களப்பு கிளையின் தலைவர் தேசமானி ரஞ்சித மூர்த்தி தலைமையில் தனியார் விடுதியில் 20.01.2024 அன்று இடம்பெற்றது.
இந் நிகழ்வில் பிரதம அதிதிகளாக கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவ சந்திரகாந்தன் மற்று வர்த்தக வாணிப இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் கலந்துகொண்டதுடன் விசேட அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜே.ஜே. முரளிதரன் மற்றும் இலங்கை தேசிய நிர்மான சங்கத்தின் தலைவர் எம்.டரின்டன் பொல் எனப்பலரும் கலந்துகொண்டனர்.
இங்கு கருத்து தெரிவித்த வீதிகள் அவிருத்தி ராஜாங்க அமைச்சர் கொவிற் தொற்று ஏற்பட்ட காலத்தில் நிர்மான துறையில் ஈடுபட்டவர்கள் பாதிக்கப்பட்டதுடன் தற்போது இளைஞர்களுக்கு தொழில் வழங்கும் ஒரு துறையாக உள்ளது என்றார்.
மேலும் வர்த்தக வாணிப இராஜாங்க அமைச்சர் கருத்து தெரிவிக்கையில் மாவட்டத்தில் அபிவிருத்தி திட்டங்களை மேற்கொள்வதற்கு ஜனாதிபதி, பிரதமர், மற்றும் அமைச்சர்களிடம் கலந்துறையாடி அபிவிருத்தி வேலைத்திட்டங்களை கொண்டுவந்ததாக இதன் போது கூறினார்.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇