இது வியட்நாமிலுள்ள ஊதுபத்தி தயாரிக்கும் கிராமத்தில் எடுத்த புகைப்படம்.
அந்த கிராமத்தில் ஏதோ ஒரு பூந்தோட்டத்தை கமராவில் க்ளிக் செய்திருக்கிறார்கள் என்றுதானே நினைக்கிறீர்கள். அதுதான் இல்லை.
வியட்நாமின் வட பகுதியிலுள்ள டாங் தி ஹோவா (Dang Thi Hoa) என்ற சிறிய கிராமத்தில் புத்தாண்டுக்காக தயாரித்த உலர்ந்த ஊதுபத்தி குச்சிகள் கட்டி வைக்கப்பட்டுள்ள காட்சியே புகைப்படங்களில் இவ்வளவு அழகாக பூந்தோட்டம் போல் காட்சியளிக்கிறது.
வியட்நாமில் டெட் என அழைக்கப்படும் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு முன்னதாக டாங் தி ஹோவா கிராமவாசிகள் மூன்று தலைமுறையாக ஊதுபத்தி குச்சிகளை தயாரித்து வருகிறார்கள்.
இவர்கள் வழமையாக ஊதுபத்தி குச்சிகளுக்கு கருஞ்சிவப்பு அல்லது இளஞ்சிவப்பு சாயங்களை பூசுவார்கள். ஆனால், தற்போது ஹோவா மற்றும் குவாங் ஃபூ கா ஊதுபத்தி தயாரிக்கும் கிராமவாசிகள் மஞ்சள், நீலம் மற்றும் பச்சை நிற சாயங்களை ஊதுபத்தி குச்சிகளுக்குப் பூசுவதை காண முடிகிறது.
பல வண்ணங்களை கொண்ட நூற்றுக்கணக்கான அழகிய ஊதுபத்தி குச்சிகள் கட்டு கட்டாக ஒரு கோவிலின் முன் வியட்நாமிய வரைபடத்தின் வடிவில் வெய்யிலில் உலர வைக்கப்பட்டுள்ள காட்சியும் இங்கே கமராவில் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இந்த ஊதுபத்தி குச்சிகள் அடுக்கப்பட்டுள்ள விதம் பார்ப்போரின் கண்களை கவர்ந்திழுக்கின்றன. இதனை பார்வையிட வரும் சுற்றுலாப் பயணிகள், இந்த ஊதுபத்தி குச்சிகளோடு செல்ஃபி எடுப்பதற்காக கிராமவாசிகள் பணத்தை வசூலிக்கிறார்கள்.
இவ்வாறு புகைப்படம் எடுத்துக்கொள்ள விரும்பும் சுற்றுலாப் பயணிகள் ஒரு செல்ஃபிக்கு 2 அமெரிக்க டொலர் வரை கிராமவாசிகளுக்கு வழங்க வேண்டுமாம்.
20 ஊதுபத்தி குச்சிகள் கொண்ட ஒரு பக்கற்றின் விலை வியட்நாம் மதிப்பில் 50 சதம் ஆகும்.
இந்த ஊதுபத்தி குச்சியின் பரந்த தோற்றத்தை உயரமான இடத்தில் இருந்து பார்வையிட அருகிலுள்ள வீடொன்றில் உலோக படிகட்டுகள் அமைக்கப்பட்டுள்ளன.
தற்போது இந்த ஊதுபத்தி குச்சிகளின் புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றன.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇