அரச பிணையங்கள் சந்தையில் மேற்கொள்ளப்பட்ட வெளிநாட்டு முதலீடுகள் கடந்த ஆண்டில் தேறிய உட்பாய்ச்சலை பதிவு செய்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் 23 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான தேறிய வெளிப்பாய்ச்சலை பதிவு செய்த போதிலும், ஆண்டு இறுதியில் 210 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான தேறிய உட்பாய்ச்சலை பதிவு செய்துள்ளதாக, இலங்கை மத்திய வங்கி விடுத்துள்ள அறிக்கையொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, முதலாந்தர மற்றும் இரண்டாந்தர சந்தைக் கொடுக்கல் வாங்கல்கள் உள்ளடங்கலாக கொழும்புப் பங்குப் பரிவர்த்தனைக்கான வெளிநாட்டு உட்பாய்ச்சல்கள் கடந்த ஆண்டில் 18 மில்லியன் அமெரிக்க டொலரை கொண்ட தேறிய உட்பாய்ச்சலை பதிவுசெய்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி குறிப்பிட்டுள்ளது.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇