கோறளைப்பற்று வடக்கு வாகரை பிரதேச செயலகத்தின் ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம்!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

கோறளைப்பற்று வடக்கு வாகரை பிரதேச ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம் பிரதேச செயலாளர் ஜீ.அருணனின் ஏற்பாட்டில் (02.02.2024) அன்று பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.

ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தில் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரும் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுத் தலைவருமான சிவனேசதுரை சந்திரகாந்தன் , பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் மற்றும் திணைக்களத் தலைவர்கள், சமூகமட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள், அலுவலக உத்தியோகத்தர்கள் எனப்பலரும் கலந்துகொண்டனர்.

இவ் ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தில் பிரதேச செயலக பிரிவில் தற்போது நடைபெறுகின்ற அபிவிருத்தி செயற்பாட்டுத்திட்டங்கள் தொடர்பான முன்னேற்றங்கள் குறித்து ஆராயப்பட்டதுடன் எதிர்கால அபிவிருத்தித்திட்டங்கள் தொடர்பான முன்னேற்பாடுகளும் பரிந்துரைக்கப்பட்டன.

மேலும் இதன் போது பிரதேச மட்டத்திலான திணைக்களங்களின் தற்போதைய பிரச்சினைகளும் இனங்காணப்பட்டு அதற்கான தீர்வுகளும் முன்மொழியப்பட்டமை குறிப்பிடத்தக்கது .

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects