மகா சிவராத்திரி தினத்தை முன்னிட்டு ஊவா மாகாணத்தில் இயங்கும் தமிழ் பாடசாலைகளுக்கு எதிர்வரும் 27ஆம் திகதி விசேட விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக மாகாண கல்வி அமைச்சின் சிரேஷ்ட உதவி செயலாளர் டப்ளியூ. ரந்தெனிய கடிதம் மூலம் அறிவித்துள்ளார்.
அவரது அக்கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
நாளை (26.02.2025) இடம்பெறும் சிவராத்திரி வழிபாட்டு நிகழ்வுகளில் பங்கு கொள்ளும் பாடசாலை மாணவர்கள் மறுநாள் பாடசாலைக்கு செல்லும் போது பல்வேறு அசௌகரிங்களுக்கு முகங்கொடுப்பர்.
இதன்காரணமாக அம்மாணவர்களின் நலன் கருதி ஒரு நாள் விடுமுறை வழங்க வேண்டுமென பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இக்கோரிக்கைகளை கருத்திற் கொண்டு இவ்விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. குறித்த விடுமுறைக்கான பதில் பாடசாலையை எதிர்வரும் வாரத்தின் விடுமுறை நாளில் நடத்த வேண்டும் என குறிப்பிட்டுள்ளது.
இக்கடிதத்தின் பிரதிகள் ஊவா மாகாண சபையின் பிரதான செயலாளர், ஊவா மாகாண ஆளுநரின் செயலாளர் மற்றும் ஊவா மாகாண கல்விப் பணிப்பாளர் ஆகியோருக்கு அனுப்பப்பட்டுள்ளன.
இதேவேளை, வடக்கு மாகாணத்திலுள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் கிழக்கு மாகாணத்திலுள்ள தமிழ் பாடசாலைகளுக்கும் எதிர்வரும் 27 ஆம் திகதி விடுமுறை வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










