செவித்திறன் குறைபாடுள்ளவர்களுக்கான இலகுரக சாரதி அனுமதிப்பத்திரம் வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
அரசாங்கத்தின் கூற்றுப்படி, செவித்திறன் குறைபாடுள்ளவர்களுக்கு இலகுரக சாரதி அனுமதிப்பத்திரம் வழங்கும் முன்னோடித் திட்டத்தை கம்பஹா மாவட்டத்தில் நடைமுறைப்படுத்துவதற்கு 2022 நவம்பரில் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டது.
இதன்படி, முன்னோடித் திட்டத்தின் முடிவுகள் மற்றும் இந்தத் திட்டத்தை செயற்படுத்துவது தொடர்பாக போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சின் செயலாளர் தலைமையிலான குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் தேவையான நடவடிக்கைகளை எடுக்க போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
அமைச்சரவை முடிவின்படி, சாரதி அனுமதிப்பத்திரங்கள் இரண்டு வருடத்திற்கு ஒருமுறை புதுப்பித்தல் அடிப்படையில் நாடு முழுவதையும் உள்ளடக்கி செவித்திறன் குறைபாடுள்ள நபர்களுக்கு வழங்கப்படும்.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇