தொடரும் நிதி நெருக்கடி மற்றும் இறக்குமதி கட்டுப்பாடுகள் காரணமாக, கணிசமான காலத்திற்கு வாகனங்களை இறக்குமதி செய்ய இயலாது என அரசாங்கம் 06.02.2024 அன்று அறிவித்தது.
வாராந்த அமைச்சரவை ஊடகவியலாளர் சந்திப்பில் 06.02.2024 அன்று உரையாற்றிய அமைச்சரவைப் பேச்சாளர் பந்துல குணவர்தன, இறக்குமதி கட்டுப்பாடுகள் கவனமாகவும் படிப்படியாகவும் தளர்த்தப்படும் என்றார்.
இலங்கை மத்திய வங்கி (CBSL) இறக்குமதி கட்டுப்பாடுகளை படிப்படியாக தளர்த்துவதற்கான முடிவுகளை எவ்வாறு எடுக்கிறது என்பது குறித்து அமைச்சரவைக்கு அறிவிக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇