நேற்று (06) மாலை 4.00 மணி முதல் இன்று (07) மாலை 4.00 மணி வரை அமுலுக்கு வரும் வகையில் நாட்டின் பல பிரதேசங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை அறிவிப்பு ஒன்றை தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்டுள்ளது.
இதன்படி, கேகாலை மாவட்டத்தின் தெரணியகல, ருவான்வெல்ல, தெஹிம்பிவிட்ட, யட்டியந்தோட்டை, கேகாலை, கலிகமுவ, புலத்கொஹுபிட்டிய, வரகாபொல மற்றும் அரநாயக்க ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளும் இரத்தினபுரி, குருவிட்ட மற்றும் எஹெலியகொட ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு ‘அவதானத்துடன் இருக்கவும்’ என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், பதுளை, காலி, களுத்துறை, கண்டி, குருநாகல் மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களுக்கு ‘கவனமாக இருக்கவும்’ என மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇