பாடசாலை கல்வியை முடித்து தொழிற் கல்வியை அல்லது உயர் கல்வியை தொடர காத்திருப்பவர்கள் பல்வேறு விதங்களில் திட்டமிட்டு வருகிறார்கள். அந்த வகையில் இதற்காக வழிகாட்டும் விதமாக மட்டக்களப்பு மாவட்டத்திலும் ஈஸ்டன் எக்ஸ்போ கண்காட்சி இடம்பெறவுள்ளது.
இக்கண்காட்சி வெளிநாட்டில் உயர்கல்வியைத் தொடரத் திட்டமிடும் ஆர்வலர்களுக்கு சரியான முறையில் திட்டமிடுவதற்கான வழிகாட்டலை வழங்கும் அரிய வாய்ப்பாக மட்டக்களப்பு மண்ணில் நடைபெறவுள்ளது.
கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு, திருகோணமலை மற்றும் அம்பாறை ஆகிய மாவட்டங்களில் வசிக்கும் பெற்றோர் தமது பிள்ளைகளின் எதிர் காலத்தை சிறந்த முறையில் வடிவமைத்துக் கொள்ள வழிகாட்டும் பல கல்வி வாய்ப்புக்களை வெளிப்படுத்துவதற்காக மட்டக்களப்பு கல்லடியில் அமைந்துள்ள சன் சைன் கிராண்ட் மண்டபத்தில் 08 ஆம் 9 ஆம் திகதிகளில் ஈஸ்டன் எக்ஸ்போ 2024 (Eastern Expo 2024) உயர் கல்வி கண் காட்சி இடம்பெறவுள்ளதுடன், அதில் அனைவரும் இலவச அனுமதியுடன் கலந்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇