மனித நேய அமைப்பின் நிதி உதவியில் மட்டக்களப்பு முதியோர் இல்ல எழைகளின் சிறிய சகோதரிகள் சபை மற்றும் மட்டக்களப்பு சென்ட் ஜோன் அம்புலன்ஸ் ஆகியோருக்கும் சக்கர நாற்காலிகள் வழங்கி வைக்கப்பட்டன
மட்டக்களப்பு முதியோர் இல்ல எழைகளின் சிறிய சகோதரிகள் சபை அருட் சகோதரிகள் மற்றும் மட்டக்களப்பு சென்ட் ஜோன் அம்புலன்ஸ் ஆகியோர் மட்டக்களப்பு பெம்டோ அமைப்பினரிடம் விடுக்கப்பட்ட வேண்டுகோளுக்கு இணங்க லண்டன் மனித நேய அமைப்பின் நிதி உதவியின் ஊடாக மட்டக்களப்பு தீரணியம் திறந்த பாடசாலைக்கு மருத்துவ உபகரணங்களும் , முதியோர் இல்ல எழைகளின் சிறிய சகோதரிகள் சபை அருட் சகோதரிகுளுக்கும் மட்டக்களப்பு சென்ட் ஜோன் அம்புலன்ஸ் நிறுவனத்திற்கும் சக்கர நாற்காலிகள் மற்றும் விசேட தேவையுடையவருக்கான சக்கர நாற்காலி என்பன வழங்கி வைக்கப்பட்டன.
தீரணியம் திறந்த பாடசாலை ஸ்தாபகர் உளநல வைத்திய நிபுணர் வைத்தியர் ஜூடி ரமேஷ் ஜெயகுமார் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் பிரதம அதிதியாக மாவட்ட அரசாங்க அதிபர் ஜெஸ்டினா முரளிதரன் கலந்து கொண்டு சக்கர நாற்காலிகள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் வழங்கி வைத்தார்.
இந்நிகழ்வில் சென்ட் ஜோன்ஸ் அம்புலன்ஸ் மாவட்ட இணைப்பாளர் மீரா சாய்பு தீரணியம் திறந்த பாடசாலை பயிற்சி நிலைய அதிபர் அருட்சகோதர் மைகல், தீரணியம் திறந்த பாடசாலை பயிற்சி நிலைய மேலாளர் அருட் சகோதரர் ஸ்டீபன் மெதிவு, பெம்டோ அமைப்பின் பொருளாளர் கணேச மூர்த்தி மற்றும் தீரணியம் திறந்த பாடசாலை பயிற்சி நிலைய ஆசிரியர்கள், பெற்றோர் என பலரும் கலந்துகொண்டனர்.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇