இந்த ஆண்டுக்கான பாதீட்டில் காவல்துறை உத்தியோகத்தர்களுக்கான, அதிகரிக்கப்பட்ட உணவு , பயண மற்றும் தங்குமிட கொடுப்பனவு இன்று 13.02.2024 முதல் வழங்கப்படவுள்ளது.
அதன்பிரகாரம் , இதுவரை வழங்கப்பட்ட கொடுப்பனவுக்கு மேலதிகமாக பாதீட்டின் ஊடாக அதிகரிக்கப்பட்டுள்ள கொடுப்பனவில் அரைவாசி வழங்கப்படவுள்ளது.
கனிஷ்ட உத்தியோகத்தர்களுக்கு வழங்கப்பட்டுவந்த 17,000 ரூபாய் கொடுப்பனவு பாதீட்டின் மூலம் 11,800 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.
அதிகரிக்கப்பட்ட குறித்த தொகையில் 50 சதவீதத்தை உடனடியாக வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇