பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவினால் மேற்கொள்ளப்பட்ட பகுப்பாய்வின் படி, தற்போதைய மின்சாரக் கட்டணங்கள் 20 முதல் 25 வீதம் (20% – 25%) வரை குறைக்க முடியும் என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் ஊழியர் சங்கம் தெரிவித்துள்ளது.
இலங்கை மின்சார சபையினால் முன்மொழியப்பட்ட மின் கட்டண திருத்தம் மற்றும் இலங்கை மின்சார சபையின் அண்மைய நிதி அறிக்கைகளின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் மூலம் இது தெரியவந்துள்ளதாக தொழிற்சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் எதிர்காலத்தில் மின்சாரக் கட்டணங்கள் தொடர்பில் தீர்மானம் எடுக்கும் போது அது சுயாதீன பகுப்பாய்வு, ஆணைக்குழுவின் மின்சாரக் கட்டணத் திணைக்கள நிபுணர்களின் பரிந்துரைகள் மற்றும் ஏனைய பங்குதாரர்களின் பரிசீலனைகளின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட வேண்டும் என அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் ஊழியர் சங்கம் விசேட அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளதுடன், பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தீர்மானங்களின் நேர்மை மற்றும் வெளிப்படைத் தன்மையில் தற்போதும் நுகர்வோரின் நம்பிக்கை பாதிக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளது.
எதிர்வரும் மின்சாரக் கட்டண திருத்தம் தொடர்பில் கலந்துரையாடுவதற்கு ஆணைக்குழுவின் தலைவரிடம் கலந்துரையாடல் ஒன்றையும் தொழிற்சங்கம் கோரியுள்ளது. இதேவேளை, பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிற்கு வழங்கப்பட்டுள்ள ஒழுங்குமுறைப் பொறுப்பை நிறைவேற்றுவதில், வெளிப்படைத்தன்மை, பொறுப்புக்கூறல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு தொடர்பில் உயர் தரங்களைப் பேணுவது மற்றும் சுயாதீனமான முடிவுகளை எடுப்பது அவசியமானது என தொழிற்சங்கம் மேலும் வலியுறுத்துகிறது.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇