இலங்கை மின்சார சபையின் (CEB) சீர்திருத்த செயல்முறைக்கு வழங்கப்பட்ட தொடர்ச்சியான ஆதரவிற்காக ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனத்திற்கு (JICA) மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தனது நன்றியைத் தெரிவித்துள்ளார்.
நேற்று மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சில் நடைபெற்ற JICA இன் தலைவர் தனகா அகிஹிகோ மற்றும் நிறுவனத்தின் சிரேஷ்ட அதிகாரிகளுடனான சந்திப்பின் போது தாம் நன்றி தெரிவித்ததாக அமைச்சர் X’ பதிவில் தெரிவித்துள்ளார்.
“JICA மின்சாரத் துறையின் முக்கிய உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்கும், மானியங்கள், சலுகை நிதி வசதிகள் மற்றும் தொழில்நுட்ப உதவிகளுடன் ஆற்றல் சக்தி திட்டங்களுக்கும் உதவியுள்ளது. தற்போது, சீர்திருத்த செயலகத்தை அமைப்பதற்கும், சீர்திருத்தங்களைச் செயற்படுத்த வல்லுனர்களை செயலகத்திற்கு விரிவுபடுத்துவதற்கும் நிதி மற்றும் தொழில்நுட்ப உதவியுடன் CEBயின் சீர்திருத்த செயல்முறைக்கு JICA தீவிரமாக உதவி வருகிறது,”
JICA தலைவர் மற்றும் பிரதிநிதிகளின் உதவிக்கு நன்றி தெரிவிப்பதாகவும், சீர்திருத்தங்கள், எரிசக்தி திறன் திட்டங்கள், உட்கட்டமைப்பு மேம்பாடு மற்றும் புதுப்பிக்கத்தக்க சக்தியை ஒருங்கிணைத்தல் போன்றவற்றுக்கு தொடர்ந்து உதவிகளை கோரியதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇