பதுளை மாவட்டத்தின் வளிமண்டலத்தில் வழமைக்கு அப்பால் தூசித் துகள்களின் செறிவு அதிகரித்துள்ளதாக பதுளை அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பிரதிப் பணிப்பாளர் ஈ.எம்.எல்.உதய குமார தெரிவித்துள்ளார்.
இந்த நாட்களில் இலங்கைக்கு வெளியில் இருந்து வீசும் காற்றில் உள்ள சிறிய தூசி துகள்கள் உள்நாட்டிற்கு வந்து பதுளை மாவட்டம் முழுவதும் வளிமண்டலத்தில் பரவியுள்ளது.
இது சாதாரண வளிமண்டலத்தில் இருக்க வேண்டிய தூசி அடர்த்தியை விட அதிக அடர்த்தியாக உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதன்காரணமாக பொது சுகாதாரம் பாதிக்கப்படலாம் எனவும் குறிப்பாக இந்த நிலையில் சுவாசக் கோளாறு உள்ள சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அவதானமாக இருக்க வேண்டியது அவசியம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் விசேட கவனம் செலுத்தியுள்ளதாக உதய குமார மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇