தம்புள்ளையில் 17.02.2024 அன்று நடைபெறவுள்ள இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான முதலாவது இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டிக்கான அனைத்து டிக்கெட்டுகளும் விற்றுத் தீர்ந்துவிட்டதாக சிறிலங்கா கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளது.
அதன்படி, போட்டியை காண டிக்கெட் கொள்வனவு செய்ய வருகை தருவதை தவிர்க்குமாறு கிரிக்கெட் ரசிகர்களிடம் கோரிக்கை விடுப்பதாக சிறிலங்கா கிரிக்கெட் அறிக்கை ஒன்றை வௌியிட்டு தெரிவித்துள்ளது.
இதேவேளை, தம்புள்ளை விளையாட்டு மைதானத்திற்கு அருகாமையில் நேற்று (15.02.2024) அதிகளவானோர் டிக்கெட்டுக்களை பெறுவதற்காக வரிசையில் காத்திருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇