மட்டக்களப்பு மாவட்ட இளைஞர் யுவதிகளின் ஏற்பாட்டில் இரத்த தான முகமொன்று சிரேஸ்ட சட்டத்தரணியும் சமூக செயற்பாட்டாளருமான மயூரி ஜனன் ஏற்பாட்டில் மட்டக்களப்பு வை.எம்.சீ.ஏ மண்டபத்தில் இடம்பெற்றது
இந் நிகழ்வில் சிறப்பு அதிதிகளாக கலந்து கொண்ட கிழக்கு பல்கலைக்கழக சுவாமி விபுலானந்தா அழகியற் கற்கைகள் நிறுவக பணிப்பாளர் பேராசிரியர் புளோரன்ஸ் பாரதி கென்னடி மற்றும் ஏறாவூர் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உள்ளிட்டோர் கலந்துகொண்டு , இரத்த தானத்தினையும் மேற்கொண்டுள்ளதுடன், இரத்த கொடையாளர்களுக்கு மரக்கன்றுகளும் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.
இதன் போது மட்டக்களப்பு பிராந்திய இரத்த வங்கியின் வைத்தியர் உள்ளிட்ட உத்தியோகத்தர்கள் வருகை தந்து இரத்த கொடையாளர்களிடமிருந்து வழங்கப்பட்ட இரத்தங்களை சேகரித்துள்ளனர்.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇