நாளையுடன் நிறைவடையவுள்ள கடவுச்சீட்டு வழங்கும் 24 மணிநேர சேவை!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

கடவுச்சீட்டு விநியோகிக்கும் ஒருநாள் சேவை 24 மணி நேரமும் முன்னெடுக்கும் செயற்பாடு கடந்த 18.02.2025 ஆம் திகதி முதல் இடம்பெற்றிருந்த நிலையில், நாளையுடன் (30.05.2025) நிறைவுக்கு வரவுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதற்கமைய, 2025 ஜூன் 2 ஆம் திகதி முதல் பத்தரமுல்லையில் உள்ள குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் தலைமை அலுவலகத்தில் ஒரே நாளில் கடவுச்சீட்டு வழங்கும் சேவைக்கான விண்ணப்பங்கள் காலை 7 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை ஏற்றுக்கொள்ளப்படும். 

அன்றைய தினம் ஒருநாள் சேவையின் கீழ் முன்கூட்டியே திகதியை முன்பதிவு செய்த விண்ணப்பதாரர்களும், அவசர அல்லது முன்னுரிமை தேவைகளைக் கொண்ட விண்ணப்பதாரர்களும் மேற்கண்ட காலகட்டத்தில் ஒருநாள் சேவையின் கீழ் தங்களது விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கலாம். 

தலைமை அலுவலகத்தில் சாதாரண சேவைகளின் கீழ் விண்ணப்பங்களும் காலை 7 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை ஏற்றுக்கொள்ளப்படும். 

பிராந்திய அலுவலகங்களில் காலை 7 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை சாதாரண மற்றும் ஒருநாள் சேவைக்கான விண்ணப்பங்களை ஏற்கும் பணிகள் வழமை போன்று இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects