இலங்கைக்கான கியூபா குடியரசின் தூதுவருக்கும் பிரதமருக்கும் இடையில் சந்திப்பு!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

இலங்கைக்கான கியூபா குடியரசின் தூதுவர் பட்ரிசியா லசாரா பெகோ குவேரா (Patricia Lazara Pego Guerra) , பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவை 26.03.2026 பிரதமர் அலுவலகத்தில் சந்தித்துக் கலந்துரையாடினார்.

இந்த சந்திப்பின்போது, இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால நட்புறவை மீண்டும் உறுதிப்படுத்திய இரு தரப்பினரும், இருதரப்பு உறவுகளின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினர்.

இரு நாடுகளினதும் மனித வளத்தைப் பலப்படுத்துவதற்கான பரிமாற்ற வேலைத்திட்டங்கள் மற்றும் திறன் மேம்பாட்டு முயற்சிகளை முன்னெடுப்பது உட்பட, கல்வித்துறையிலான ஒத்துழைப்பை மேலும் விரிவுபடுத்துவது குறித்தும் இக்கலந்துரையாடலில் விசேட கவனம் செலுத்தப்பட்டது.

அத்துடன், நிலையான விவசாய நடைமுறைகளை மேம்படுத்துவதற்காக அறிவு மற்றும் தொழில்நுட்ப நிபுணத்துவத்தைப் பரிமாறிக்கொள்வதன் மூலம், விவசாயத்துறையில் ஒத்துழைப்பை மேலும் பலப்படுத்துவது குறித்தும் இங்கு ஆராயப்பட்டது.

மேலும், விளையாட்டுத் துறையிலான ஒத்துழைப்பை மேம்படுத்துவதன் அவசியமும் இதன்போது சுட்டிக்காட்டப்பட்டது.

இந் நிகழ்வில் பிரதமரின் செயலாளர், பிரதமரின் மேலதிக செயலாளர் திருமதி சாகரிகா போகஹவத்த மற்றும் வெளிவிவகார அமைச்சின் லத்தீன் அமெரிக்கா மற்றும் கரீபியன் பிரிவின் பணிப்பாளர் நாயகம் திரு. இரத்தினசிங்கம் கோகுலரங்கன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

(பிரதமர் ஊடகப் பிரிவு)

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇




Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects