மட்டக்களப்பு கல்லடி வேலூர் ஸ்ரீ சக்தி வித்தியாலயத்தை தரமுயர்த்தும் நிகழ்வு வித்தியாலயத்தின் அதிபர் எஸ்.பிறன்சிஸ் தலைமையில் இடம்பெற்றது.
சிறுவர் நேய பாடசாலையான கல்லடி வேலூர் ஸ்ரீ சக்தி வித்தியாலயமானது தரம் ஒன்பது வரை இருந்து வந்த நிலையில் மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்பு குழுத் தலைவரும் இராஜாங்க அமைச்சருமான சிவநேசதுரை சந்திரகாந்தனின் சிபாரிசுக்கு அமைய கல்வி அமைச்சினால் தர முயர்த்தப்பட்டுள்ள நிலையில் (19.02.2024) அன்று இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனினால் 10 மற்றும் 11 ஆம் தர வகுப்புக்கள் ஆரம்பித்துவைக்கப்பட்டது.
இந் நிகழ்வில் மதகுருமார், மட்டக்களப்பு வலயக்கல்வி அலுவலகத்தின் பிரதிக்கல்விப் பணிப்பாளர் (நிருவாகம்) திருமதி சாமினி ரவிராஜா, பிரதிக்கல்விப் பணிப்பாளர் (திட்டமிடல்) திருமதி.சீ.சுபாஹரன், கோட்டக்கல்வி அலுவலக அதிகாரிகள், முன்னால் அதிபர்கள், ஆசிரியர்கள், பழைய மாணவர்கள், நலன்விரும்பிகள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் எனப்பலரும் கலந்துகொண்டனர்.
மலர் மாலை அணிவித்து , பாண்டு வாத்திய இசை முழங்க அதிதிகள் வரவேற்கப்பட்டதனை தொடர்ந்து 10 மற்றும் 11 ஆம் தரங்கள் ஆரம்பித்து வைக்கப்பட்டு , மங்கள விளக்கேற்றலுடன் அரங்க நிகழ்வுகள் இடம்பெற்றது.
நிகழ்வில் மட்டக்களப்பு இராமகிருஷ்ண மிஷன் உதவி முகாமையாளர் சுராஜ்சிதானந்தா மகராஜ்சியின் உரையினை தொடர்ந்து விசேட மற்றும் பிரதம அதிதி உரைகள் இடம்பெற்றது.
மேலும் அரசினால் வழங்கப்படும் இலவச பாட புத்தகங்கள் இராஜாங்க அமைச்சர் உள்ளிட்ட அதிதிகளினால் வழங்கி வைக்கப்பட்டது.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇