கடந்த சில மாதங்களுடன் ஒப்பிடுகையில் மின்சார தேவை அதிகரித்துள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
இலங்கை மின்சார சபையின் ஊடகப் பேச்சாளர் நோயல் பிரியந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், குறித்த நாட்களில் நீர் மின் உற்பத்தி 21% ஆக குறைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
தற்போது நீர் மின்னுற்பத்தி நிலையங்களுடன் தொடர்புடைய நீர்த்தேக்கங்களின் கொள்ளளவு 83 சதவீதமாக உள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இதனால் மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துமாறு இலங்கை மின்சார சபை மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇