யாழ்ப்பாணத்தில் உள்ளூர் தனியார் பேரூந்து சேவைகள் வழமைபோன்று சேவையை முன்னெடுத்து வருகின்ற நிலையில், நெடுந்தூர பேரூந்து சேவைகள் முற்றாக நிறுத்தப்பட்டுள்ளன.
முறையான பேருந்து தரிப்பிடம் இல்லாததால் இன்று (28) முதல் தனியார் போக்குவரத்து சேவைகள் இடம்பெறாது என வட இலங்கை தனியார் பேரூந்து உரிமையாளர்கள் சங்கம் தலைவர் சி.சிவபரன் நேற்று (27) ஊடக சந்திப்பில் தெரிவித்திருந்தார்.
இதனால் யாழ்ப்பாணத்தில் இருந்து வேறு மாவட்டங்களுக்கு சேவையில் ஈடுபடும் பேரூந்துகள், அத்தோடு வெளி மாவட்டங்களில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு சேவையில் ஈடுபடும் தனியார் பேரூந்துகள் தமது சேவையை முற்றாக இடைநிறுத்தியுள்ளதை அவதானிக்க முடிகின்றது.
இருந்தாலும் உள்ளூர் தனியார் பேரூந்து சேவைகள் வழமைபோன்று தமது சேவையை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇