மண்முனைப்பற்று – புதுக்குடியிருப்பு அகரம் பாலர் பாடசாலையின் திறப்பு விழா அகரம் பாலர் பாடசாலையின் தலைவர் அகரம் செ.துஜியந்தன் தலைமையில் நடைபெற்றது.
இந் நிகழ்வில் மட்டக்களப்பு ராமகிருஸ்ணமிஷன் பொது முகாமையாளர் சுவாமி நீலமாதவானந்தர் ஜி மஹராஜ் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.
நிகழ்வில் சிவஸ்ரீ கிரிதரக்குருக்கள், மட்டக்களப்பு சிறுவர் நன்னடத்தை அதிகாரி பா. சந்திரகாந்தன், கிராமசேவை உத்தியோகத்தர்களான திருமதி தயானி கிருஸ்ணாகரன், டிலக்சன், ஓய்வு நிலை ஆசிரியை ஜயந்தி, சமூக செயற்பாட்டாளர்கள், விளையாட்டு கழகங்களின் தலைவர்கள், பொதுநல அமைப்புக்களின் பிரதிநிதிகள் எனப் பலர் கலந்து கொண்டனர்.
இவ் வருடம் புதிதாக பாலர் பாடசாலைக்கு இணைந்து கொண்ட மாணவர்கள் மலர்மாலை அணிவித்து கோலாட்டம், கும்மி ஆகிய நடனக்கலைஞர்களால் பவனியாக அழைத்து செல்லப்பட்டனர். இங்கு சிறுவர்களின் கலை நிகழ்வுகளும் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇