சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) அதிகாரிகள் குழு 07.03.2024 அன்று நாட்டிற்கு வருகை தரவுள்ளதாக நிதி அமைச்சு அறிவித்துள்ளது.
இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தால் ஆதரிக்கப்படும் திட்டத்தின் மூன்றாவது தவணை தொடர்பான முக்கியமான நிதி விவகாரங்களை நிவர்த்தி செய்வதே இந்த விஜயத்தின் நோக்கமாகும்.
எதிர்வரும் விஜயத்தை நிதி அமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தன உறுதிப்படுத்தியுள்ளார்.
சர்வதேச நாணய நிதியத்தின் அதிகாரிகள், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் ஏனைய உயர்மட்ட அதிகாரிகள் உட்பட முக்கிய பங்குதாரர்களுடன் கலந்துரையாடவுள்ளனர்.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇