“வழிதேடும் சிறுவர்களின் ஒளியாக மிளிர்வோம்” உதவும் கரங்கள் இல்லத்தின், சுவாமி விபுலாநந்தர் பாலர் பாடசாலைக்கு புதிய கல்வி ஆண்டிற்கான புதுமுக மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு 04.03.2024 அன்று மட்டக்களப்பு மயிலம்பாவெளி உதவும் கரங்கள் சிறுவர் இல்லத்தின் தலைவரும் சிரேஸ்ட விரிவுரையாளருமான எஸ்.ஜெயராஜா தலைமையில் சிறுவர் இல்லத்தில் நடைபெற்றது.
இந் நிகழ்விற்கு பிரதம அதிதியாக கிழக்கு பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் சரோஜினி மகேஷ்வரநாதன் கலந்து கொண்டதோடு , சிறப்பு அதிதிகளாக மட்டக்களப்பு கல்வி வலய முறைசாரா கல்வி உதவி பணிப்பாளர் முருகு தயானந்தன், மட்டக்களப்பு வலயக் கல்வி அலுவலக முன்பள்ளி கல்வி அபிவிருத்தி உதவி கல்வி பணிப்பாளர் திருமதி விவேகானந்தன், மற்றும் கௌரவ அதிதிகளாக சேவா லங்கா திட்டப் பணிப்பாளர் சாயி ராஜன், நடராஜ சைவ சித்தாந்த பயிற்சி மைய செயலாளர் சைவ புலவர் திருமதி வேதநாயகம், ஏறாவூர் பற்று முன் பிள்ளை கல்வி அபிவிருத்தி உத்தியோகத்தர் ஏ.எஸ்.நபீலா , உதவும் கரங்கள் இல்ல மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள், உதவும் கரங்கள் இல்ல உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
இதன்போது பாலர் பாடசாலை சிறுவர்களின் கலை கலாசார நிகழ்வுகள் இடம்பெற்றதுடன் சிறுவர்களுக்கான கற்றல் உபகரணங்களும் வழங்கிவைக்கப்பட்டன.
கிழக்கு சமூக அபிவிருத்தி ஒன்றியத்தின் உதவும் கரங்கள் அமைப்பின் அனுசரணையில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் கல்வி பயிலும் மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களில் வசிக்கும், வறுமைக் கோட்டிற்குபட்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த தெரிவு செய்யப்பட்ட பல்கலைக்கழக மாணவர்களுக்கு இதன் போது ஒரு வேளை உணவுக்கான நிதியும் வழங்கி வைக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇