2024 ஆம் ஆண்டிற்கான திருத்தப்பட்ட பாடசாலை கால அட்டவணை கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி கடந்த பெப்ரவரி மாதம் 19 ஆம் திகதி ஆரம்பமான பாடசாலையின் முதல் தவணையின் முதல் கட்டம் ஏப்ரல் 10 ஆம் திகதி வரை இடம்பெறும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
முதல் தவணையின் இரண்டாம் கட்டம் ஏப்ரல் 24 ஆம் திகதி முதல் மே 3 ஆம் திகதி வரையிலும், மூன்றாம் கட்டம் மே 20 ஆம் திகதி முதல் மே 31 ஆம் திகதி வரையிலும் நடைபெறும்.
பாடசாலைகளின் இரண்டாவது தவணை ஜூன் 3 ஆம் திகதி முதல் ஆகஸ்ட் 16 ஆம் திகதி வரை நடைபெறும் எனவும் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
மேலும் 2024 ஆம் ஆண்டின் மூன்றாம் தவணையின் முதல் கட்டம் ஆகஸ்ட் 26 ஆம் திகதி முதல் நவம்பர் 22 ஆம் திகதி வரை நடைபெறுவதோடு, மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்டம் உயர்தரப் பரீட்சைக்குப் பிறகு 2025 ஜனவரி 02 ஆம் திகதி ஆரம்பமாகும்.
2024 ஆம் ஆண்டின் பாடசாலைகளின் மூன்றாம் தவணை 2025 ஆம் ஆண்டு ஜனவரி 17 ஆம் திகதி முடிவடைய உள்ளதாகவும் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇