கல்வி அமைச்சின் முன்னோடி விசேட தொழில் வழிகாட்டல் நிகழ்ச்சித்திட்டத்தின் ஊடாக முன்னெடுக்கப்படும் கல்விப் பொது தராதர உயர்தரப் பரீட்சை எழுதிய மாணவர்களுக்கான மூன்று மாத கால தொழில் வழிகாட்டல் பயிற்சி நெறி திறன் அபிவிருத்தி திணைக்களத்தினால் நாடளாவிய ரீதியில் 299 பாடசாலைகள் தெரிவு செய்யப்பட்டு அதற்கான வேலைத்திட்டம் 05.03.2024 அன்று ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
இதனடிப்படையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் 30 பாடசாலைகள் தெரிவு செய்யப் பட்டுள்ள நிலையில் அவர்களுக்கான ஆரம்ப நிகழ்வு வின்சன்ட் மகளீர் உயர்தர தேசிய பாடசாலையில் மாவட்ட திறன்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர் கே.சிவகுமார் தலைமையில் 06 .03.2024 அன்று இடம்பெற்றது .
இந் நிகழ்வில் பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் கலந்து கொண்டு கல்வி அமைச்சின் குறித்த முன்னோடி விசேட தொழில் வழிகாட்டல் வேலைத்திட்டம் தொடர்பாக தெளிவூட்டல்களை வழங்கினார்.
நிகழ்வில் மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் வீ.வாசுதேவன், மட்டக்களப்பு வலயக் கல்வி அலுவலகத்தின் பிரதிக் கல்விப் பணிப்பாளர் ஹரிகரராஜ் , தெரிவு செய்யப்பட்ட மாணவிகள் எனப்பலரும் கலந்துகொண்டனர்.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇