நேற்று (மார்ச் 10) நிலவரப்படி மொத்த சந்தையில் பெரிய வெங்காயத்தின் விலை கிலோ ஒன்றுக்கு 580 – 600 ரூபாவாக அதிகரித்துள்ளதாகவும் சில்லறை விலை 700 ரூபாவாக இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசாங்கம் உடனடியாக தலையிட்டு பெரிய வெங்காயத்தை இறக்குமதி செய்யுமாறு இந்தியா மற்றும் பாகிஸ்தானிடம் கோரிக்கையை முன்வைக்காவிட்டால் எதிர்காலத்தில் நுகர்வோர் பெரிய வெங்காயத்தை 1000 ரூபா வரை அதிக விலை கொடுத்து கொள்வனவு செய்ய நேரிடும் என இறக்குமதியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
அடுத்த இரண்டு அல்லது அதிகபட்சம் மூன்று நாட்களுக்கு மட்டுமே இறக்குமதி செய்யப்படும் பெரிய வெங்காயம் கையிருப்பு உள்ளதாகவும், பாகிஸ்தான் தனது ஏற்றுமதிக் கட்டுப்பாடுகளை கடுமையாக்கியமையே காரணம் எனவும் கொழும்பு வெங்காய இறக்குமதியாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇