மத்திய அதிவேக வீதியின் ஒரு பகுதியில் இன்று (14.03.2024) முதல் 14 நாட்களுக்கு போக்குவரத்து மட்டுப்படுத்தப்படவுள்ளது.
புனரமைப்பு பணிகளுக்காக ஒரு கிலோமீற்றர் வரையான தூரத்திற்கு போக்குவரத்து மட்டுப்படுத்தப்படவுள்ளதாக அதிவேக வீதி பராமரிப்பு மற்றும் முகாமைத்துவ பிரிவின் பணிப்பாளர் கஹபிட்டிய தெரிவித்துள்ளார்.
அதற்கமைய, மீரிகம – குருணாகல் மத்திய அதிவேக வீதியின் 56ஆவது கிலோமீற்றர் முதல் 57ஆவது கிலோமீற்றர் வரையான பகுதியிலேயே இந்த புனரமைப்பு பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளன.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇