ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணி தமது பெயரில் மாற்றமொன்றை மேற்கொண்டுள்ளது.
பெங்களூர் எம்.சின்னசாமி மைதானத்தில் 19.03.2024 அன்று நடைபெற்ற நிகழ்வொன்றின்போது இது தொடர்பான அறிவிப்பு வெளியிடப்பட்டது.
அதன்படி, 2008 ஆம் ஆண்டு இந்தியன் பிரீமியர் லீக் தொடரின் ஆரம்பம் முதல் ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் என அழைக்கப்பட்ட அணி, தற்சமயம் ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு என தமது பெயரை மாற்றியுள்ளது.
2014 ஆம் ஆண்டு நவம்பர் முதலாம் திகதி முதல் கர்நாடக மாநிலத்தின் தலைநகரத்தின் பெயர் அதிகாரபூர்வமாக பெங்களூரு என மாற்றப்பட்டது.
இந்த நிலையில், உள்ளூர் ரசிகர்களால் முன்வைக்கப்பட்டுவந்த கோரிக்கைக்கு அமைய அந்த அணியின் பெயரும் மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக இந்தியன் ப்ரீமியர் லீக் தொடரில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி மூன்று ஆண்டுகளுக்கு முன்பு தமது பெயரை பஞ்சாப் கிங்ஸ் என மாற்றிக்கொண்டது.
அதே நேரத்தில் டெல்லி டேர்டெவில்ஸ் அணியும் தமது பெயரை டெல்லி கெபிட்டல்ஸ் எனவும் மாற்றிக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇