அரச மருந்தாளர்கள் ஒருநாள் வேலைநிறுத்தத்தை 20.03.2024 அன்று ஆரம்பித்துள்ளனர்.
வெற்றிடங்களுக்கு தகுதி வாய்ந்த பட்டதாரிகளை சேவையில் இணைத்துக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படாமையை சுட்டிக்காட்டி இந்த கவனயீர்ப்பு வேலைநிறுத்தம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
ஆயிரத்துக்கும் மேற்பட்ட தகுதியானவர்கள் சேவையில் இணைத்துக்கொள்ளப்படாது உள்ளதாக அரச மருந்தாளர்கள் சங்கத்தின் தலைவர் துஷார ரணதேவ தெரிவித்துள்ளார்.
சுகாதார அமைச்சு அதிகாரிகளின் அசமந்தப்போக்கினால் இவ்வாறு வெற்றிடங்கள் நிரப்பப்படாதுள்ளது. கிராமிய மற்றும் பிரதான வைத்தியசாலைகளில் மருந்தாளர்களுக்கு வெற்றிடம் காணப்படுகிறது. இந்த நிலையில் ஒரு வருட பயிற்சியை முடித்த சிலரை மருந்து கலவையாளர்களாக நியமித்து பயிற்சியளிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇