மட்டக்களப்பில் காலநிலை மாற்றத்திற்கு ஈடு கொடுக்கக் கூடிய சமூகத்தினை உருவாக்குவதற்கான நிகழ்ச்சித் திட்ட அங்குரார்ப்பணம்!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

காலநிலை மாற்றத்திற்கு ஈடு கொடுக்கக் கூடிய சமூகத்தினை உருவாக்குவதற்கான நிகழ்ச்சித் திட்டம் மட்டக்களப்பில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இலங்கைக்கான சிறுவர் நிதியத்தின் (Child Fund) அனுசரனையுடன் அக்ஷன் யுனிற்றி லங்கா தன்னார்வ தொண்டு நிறுவனத்தினால் முன்னெடுக்கப்படவுள்ள நிகழ்ச்சித் திட்டத்தின் அங்குரார்ப்பண நிகழ்வு 27.03.2024 அன்று கல்லடி தனியார் விடுதி ஒன்றில் நடைபெற்றது.

திட்டத்தின் அங்குரார்ப்பண நிகழ்விற்கு பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி.ஜஸ்டினா முரளிதரன், விசேட அதிதிகளாக சிறுவர் நிதியத்தின் (Child Fund) இலங்கைக்கான பணிப்பாளர் அதிதி கொஷ், இலங்கைக்கான சிறுவர் நிதியத்தின் வியாபார அபிவிருத்திக்கான பணிப்பாளர் தினன்த தம்பேபிற்ற, கோறளைப்பற்று தெற்கு பிரதேச செயலாளர் கே.சித்திரவேல், புனானை 23 வது இராணுவ படைப்பிரிவின் கட்டளைத் தளபதி பிரசாத் ரந்துனு, தொப்பிக்கலை 232 வது இராணுவ படைப்பிரிவின் விறிக்கேட் கொமாண்டர் மேஜர் ஜெனரல் நிலந்த பிரேமறட்ண, மட்டக்களப்பு சிறைச்சாலை அத்தியட்சகர் என்.பிரபாகரன், முல்லைத்தீவு மாவட்ட முன்னாள் மாவட்ட செயலாளர் கே.விமலநாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இதன் போது மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் மற்றும் சிறுவர் நிதியத்தின் பணிப்பாளர் ஆகியோர் இணைந்து திட்டத்தினை அங்குரார்ப்பணம் செய்துவைத்தனர்.

இந் நிகழ்வில் அக்ஷன் யுனிற்றி லங்கா தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் உயரதிகாரிகள், இலங்கைக்கான சிறுவர் நிதியத்தின் உயரதிகாரிகள் உள்ளிட்ட அரச திணைக்களங்களின் அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டனர்.

குறித்த நிகழ்ச்சித் திட்டத்தின் ஊடாக பின்தங்கிய கிராமங்கள் பலவற்றில் உள்ள பொருளாதார ரீதியாக வலுவிழந்துள்ள பல குடும்பங்கள் பயனடையவுள்ளதுடன், பொதுவான பல வேலைத்திட்டங்களும் முன்னெடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects