எதிர்வரும் பண்டிகைக் காலத்தை முன்னிட்டு அரிசியின் விலையை அதிகரிப்பதற்கு பாரிய நெல் தொழிற்சாலை உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்து வருவதாக, சிறிய மற்றும் நடுத்தர அரிசி ஆலை உரிமையாளர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
இதன் காரணமாக, எதிர்காலத்தில் நாட்டில் அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்படலாம் என்று சிறிய மற்றும் நடுத்தர அரிசி ஆலை உரிமையாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இந்நிலையில், இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோ அரிசிக்கு விதிக்கப்பட்டிருந்த 65 ரூபா விசேட பண்ட வரி , 27.03.2024 அன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் 1 ரூபா குறைக்கப்பட்டுள்ளது.
எனினும் பாரிய நெல் தொழிற்சாலை உரிமையாளர்கள் 90 தொடக்கம் 100 ரூபா வரையிலேயே, ஒரு கிலோ நெல்லை கொள்வனவு செய்வதாக சிறிய மற்றும் நடுத்தர அரிசி ஆலை உரிமையாளர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇