பொதுத் தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டை எதிர்வரும் 7 ஆம் திகதிக்கு முன்னதாக வீடுகளுக்கு கிடைக்காவிடின் அது தொடர்பாக அருகில் உள்ள தபால் நிலையத்தில் வினவுமாறு தபால் திணைக்களம் கோரியுள்ளது.
கொழும்பில் 02.11.2024 அன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துரைத்த பிரதி தபால் மா அதிபர் ராஜித்த ரணசிங்க இதனைத் தெரிவித்துள்ளார்.
பொதுத்தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகளை வீடுகளுக்கு விநியோகிக்கும் பணிகள் தற்சமயம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇