‘சைல்ட் ஃபண்ட்’ அமைப்பினால் இலங்கைக்கு 500 துவிச்சக்கர வண்டிகள் மானியமாக வழங்கி வைப்பு!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

தொலைதூரப் பிரதேசங்களில் உள்ள பாடசாலை மாணவர்களின் தினசரி வருகையை ஊக்குவிக்கும் நோக்கில், ஜப்பானிய ‘சைல்ட்ஃபண்ட்’ அமைப்பு, இலங்கைக்கு 500 துவிச்சக்கர வண்டிகளை மானியமாக வழங்கியுள்ளது.

சுசில் பிரேமஜயந்தவின் தலைமையில், பத்தரமுல்லையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர் , ஜப்பானிய ‘Child fund’ நிறுவனத்தின் பிரதிநிதி மற்றும் இலங்கை ‘Child fund’ நிறுவனத்தின் தேசிய பணிப்பாளர் அதிதி கோஷ் ஆகியோர் கலந்துகொண்டனர்.

ஏற்கனவே மொனராகலை, புத்தளம், முல்லைத்தீவு போன்ற போக்குவரத்துச் சிரமங்கள் உள்ள 12 மாவட்டங்களில் உள்ள 108 பாடசாலைகளில் இருந்து 12-16 வயதுக்குட்பட்ட பொருத்தமான மாணவர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

வீட்டில் இருந்து பாடசாலைக்கு குறைந்தபட்சம் இரண்டரை கிலோமீட்டர் தூரம் இருக்க வேண்டும் என்பது குறித்த சைக்கிள்களை வழங்குவதில் முக்கிய நிபந்தனையாக கருதப்பட்டது.

மேலும் இலங்கை ‘Child fund” வேண்டுகோளுக்கு இணங்க சைக்கிள்கள் பெறப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects