மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவை பணிமனையின் ஏற்பாட்டில் ஒரு நாள் தலைமைத்துவ பயிற்சி!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

கிழக்கு மாகாண சுகாதார அமைச்சினால் கிழக்கு மாகாணத்தில் பின் தங்கிய பிரதேச மாணவர்களின் கற்றல் செயற்பாடுகளை வினைத்திறன் உடையதாக முன்னெடுக்கும் வகையில் துறைசார்ந்தோருக்கு பிராந்திய ரீதியில் தலைமைத்துவ பயிற்சியினை வழங்கி வருகின்றது.

அதன் அடிப்படையில் மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவை அலுவலகத்தினால் மட்டக்களப்பில் கடமையாற்றும் அதிபர்கள், ஆசிரியர்களுக்கான ஒருநாள் தலைமைத்துவ பயிற்சி மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவை பணிப்பாளர் அலுவலகத்தில் அதன் பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் நவோலோஜிதன் தலைமையில் 06.04.2024 அன்று இடம்பெற்றது.

இந் நிகழ்விற்கு பிரதம அதிதியாகவும் வளவாளர்களாகவும் யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் ரீ.சத்தியமூர்த்தி, அருட்தந்தை யோசுவா அடிகளார் மற்றும் மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவை பணிமனையின் முன்னாள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஜீ.சுகுணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

பின்தங்கிய பிரதேச மாணவர்களின் கற்றல் செயற்பாடுகளை சிறப்பாக முன்னெடுப்பதற்கு வேண்டிய திட்டமிடல்கள் தலைமைத்துவம் வகித்தல் மற்றும் யுத்த காலத்தில் பொருளாதார நெருக்கடியான காலகட்டத்திலும் வடக்கு மாகாணத்தில் எவ்வாறான கற்றல் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டது என்பது தொடர்பாக இதன் போது விளக்கமளிக்கப்பட்டது.

அத்தோடு தற்போது போதைப்பொருள் பாவனையில் மாணவர் சமூகம் எதிர்நோக்கும் சுகாதார பிரச்சனைகள் சம்பந்தமாகவும் இந்த தலைமைத்துவ பயிற்சியில் வளவாளர்களால் சிறப்பான முறையில் விளக்கங்கள் வழங்கப்பட்டது.

இந் நிகழ்விற்கு பாடசாலை அதிபர்கள் ஆசிரியர்கள், வைத்தியர்கள், மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவை பணிப்பாளர் அலுவலகத்தின் உயர் அதிகாரிகள், உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects