தமிழ் சிங்கள புத்தாண்டு காலம் மற்றும் ரமழான் பண்டிகையை முன்னிட்டு லங்கா சதொச நிறுவனம் சில அத்தியாவசிய பொருட்களின் விலைகளை குறைத்துள்ளது.
இதன்படி, நெத்தலி , வெங்காயம், கோதுமை மா மற்றும் வெள்ளை அரிசி ஆகியவற்றின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளன.
ஒருகிலோ நெத்தலி 125 ரூபா விலை குறைக்கப்பட்டு 1200 ரூபாவுக்கு விற்கப்படவுள்ளது.
பெரிய வெங்கயம் ஒரு கிலோ 55 ரூபா விலை குறைக்கப்பட்டு 320 ரூபாவுக்கும் கோதுமை மா ஒருகிலோ 7 ரூபா குறைக்கப்பட்டு 185 ரூபாவுக்கும் ஒரு கிலோ வெள்ளை அரிசி 4 ரூபா குறைக்கப்பட்டு 185 ரூபாவுக்கும் விற்பனை செய்யப்படவுள்ளது.
வாடிக்கையாளர்கள் இன்று (11.04.2024) முதல் நாடளாவிய ரீதியில் உள்ள லங்கா சதொச விற்பனை நிலையங்களின் ஊடாக இப் பொருட்களைப் பெற்றுக்கொள்ள முடியும்.