இந்த வருடத்தில் இலங்கையின் பொருளாதாரம் மிதமான வளர்ச்சியை எட்டும் என ஆசிய அபிவிருத்தி வங்கி தெரிவித்துள்ளது.
ஆசிய அபிவிருத்தி வங்கி அறிக்கையொன்றின் மூலம் குறித்த விடயத்தை தெரிவித்துள்ளது.
அத்துடன், நாட்டின் பொருளாதாரத்தில் கடந்த இரண்டு வருடங்களை விட மிதமான வளர்ச்சி ஏற்பட்டுள்ளதாகவும், இந்த வருட இறுதியில் 1.9 சதவீதமான பொருளாதார வளர்ச்சி ஏற்படும் என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
குறித்த பொருளாதார வளர்ச்சி 2025ஆம் ஆண்டளவில் 2 வீதமாக அதிகரிக்கும் சாத்தியம் காணப்படுவதாகவும் ஆசிய அபிவிருத்தி வங்கி தெரிவித்துள்ளது.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇