மட்டக்களப்பு – களுவாஞ்சிக்குடி எருவில் பகுதியில் 347 மில்லியன் ரூபாய் செலவில் காபட் மற்றும் கொங்கிறிட் வீதிகளாக புரைமைக்கப்பட்ட 8.4 km உள்ளக வீதிகள் இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரனினால் மக்கள் பாவனைக்காக திறந்துவைக்கப்பட்டது.
மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் இணைத்தலைவரும் வர்த்தக இராஜாங்க அமைச்சருமான சதாசிவம் வியாழேந்திரன் பிரதம அதிதியாக கலந்து கொண்ட நிகழ்விற்கு விசேட அதிதிகளாக வீதி அபிவிருத்தி அதிகார சபையின் கிழக்கு மாகாண பிரதம நிறைவேற்று பொறியியலாளர் வரதன், கிழக்கு மாகாண பாலர் பாடசாலை பணியகத்தின் தவிசாளர் வை.சந்திரமோகன், வீதி அபிவிருத்தி அதிகார சபையின் மட்டக்களப்பு மாவட்ட பிரதம நிறைவேற்று பொறியியலாளர் லிங்கேஸ்வரன் உள்ளிட்ட கிராமிய சங்கங்களின் தலைவர்கள் பிரதிநிதிகள் மற்றும் ஆலய குருமார், வீதி அபிவிருத்தி அதிகார சபையில் உத்தியோகத்தர்கள், கிராம மக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
இதன் போது தமது கிராமத்தில் நீண்ட காலமாக பாரிய பிரச்சனையாக இருந்து வந்த வீதிகளை செப்பனிட்டு கொடுத்தமைக்காக அப்பகுதி மக்கள் இராஜாங்க அமைச்சருக்கு தமது நன்றிகளை தெரிவித்துள்ளனர்.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇