வாழ்நாளில் பார்வையிட கூடிய உலகின் சிறந்த நாடுகள் பட்டியலில் இலங்கைக்கு 5 ஆவது இடம் கிடைத்துள்ளது.
புதிய இடங்களை ஆராய்வது மற்றும் புதிய நபர்களைச் சந்திப்பது யாருக்குத்தான் பிடிக்காது என்ற வகையில் CEO WORLD சஞ்சிகை வாழ்நாளில் பார்க்க வேண்டிய சிறந்த நாடுகளின் பட்டியலைத் தொகுத்துள்ளது.
அதற்கமைய, 2,95,000 இக்கும் மேற்பட்ட வாசகர்களின் கருத்துகளின் அடிப்படையில் தரவரிசைப்படுத்தப்பட்டுள்ள குறித்த பட்டியலில் இலங்கைக்கு 5 ஆவது இடம் கிடைத்துள்ளது.
இப் பட்டியலில் முதல் இடத்தை தாய்லாந்து தன்வசப்படுத்திக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
குறித்த நாளிதழில் தாய்லாந்து, கிரீஸ், இந்தோனேசியா, போர்த்துக்கல், இலங்கை, தென்ஆபிரிக்கா, பெரு, இத்தாலி, இந்தியா மற்றும் ஐக்கிய அரேபியா ஆகிய நாடுகள் பட்டியலிடப்பட்டுள்ளன.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇