இலங்கை உயர் தொழில்நுட்பவியல் கல்வி நிறுவகத்திற்கு புதிய மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

மட்டக்களப்பில் உயர் தொழில்நுட்பவியல் கல்வி நிறுவத்திற்கு 2025 ஆம் ஆண்டுக்கான புதிய மாணவர்களை உள்வாங்கும் நிகழ்வு உயர் தொழில்நுட்பவியல் கல்வி நிறுவகத்தின் பணிப்பாளர் செல்வரத்தினம் ஜெயபாலன் தலைமையில் தேசிய கல்வி கல்லூரியின் பிரதான மண்டபத்தில் 08.09.2025 அன்று இடம் பெற்றது.

இந் நிகழ்வின் பிரதம அதிதியாக மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் தட்சனகெளரி கலந்து கொண்டதுடன் விசேட அதிதியாக மட்டக்களப்பு தேசிய கல்விக்கல்லூரியின் பீடாதிபதி ரி.கணேசரத்தினம் கலந்து கொண்டனர்.

1000 மேற்பட்ட மாணவ மாணவிகளினால் கற்கை நெறிக்கான விண்ணப்பங்கள் மேற்கொள்ளப்பட்டிருந்த போதும் 600 மாணவர்கள் புள்ளிகளின் மூலம் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் 400 மாணவர்கள் முழுநேர கற்கைநெறிக்கும், 200 மாணவர்கள் பகுதி நேர கற்கைநெறிக்கும் தெரிவு செய்யப்பட்டுள்ளார்கள்.

உயர் தொழில்நுட்பவியல் கல்வி நிறுவத்தில் கல்வி கற்கும் மாணவர்கள் தேசிய ரீதியில் மட்டுமன்றி சர்வதேச ரீதியிலும் தொழில் வாய்ப்பை பெற்றுக் கொண்டுள்ளதுடன் மாவட்டத்தில் ஆங்கிலக் கல்வி அறிவை உயர்த்துவதற்கு உயர் தொழில்நுட்பவியல் கல்வி நிறுவகம் பாரிய சேவை செய்து வருவதாக பணிப்பாளர் இதன் போது சுட்டிக்காட்டினார்.

இதன் போது யாழ் பல்கலைக்கழகத்தின் சட்டத்துறையின் விரிவுரையாளர் சுபாசினி றுமன் பகுடிவதை சட்டம் தொடர்பான தெளிவூட்டல்களை வழங்கினார்.

இலங்கையில் உள்ள உயர் தொழில்நுட்பவியல் கல்வி நிறுவனங்களிலே மட்டக்களப்பு உயர் தொழில் நுட்பவியல் கல்வி நிறுவகமே அதிகூடிய மாணவர்களை பயிற்றுவித்து வெளியேற்றி வருவதுடன் கடந்த வருடம் மட்டக்களப்பு மாவட்ட தொழில் நுட்பவியல் கல்வி நிறுவக மாணவர்கள் இரு தங்கப்பதக்கங்களை பெற்றுக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வில் அதிதிகளுக்கு நினைவுச் சின்னங்கள் வழங்கி கெளரவிக்கப்பட்டதுடன் மாணவ மாணவிகளின் கண்கவர் நடனங்கள் மற்றும் நாடகங்கள் இடம் பெற்றது.

இந் நிகழ்வில் உயர் தொழில்நுட்ப நிறுவகத்தின் விரிவுரையாளர்கள், உத்தியோகத்தர்கள், மாணவர்கள், மாணவர்களின் பெற்றோர்கள் என பலர் கலந்துகொண்டனர்.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects