வட்ஸ்அப் செயலியில் அறிமுகமாகும் புதிய அம்சம்!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

வட்ஸ்அப் செயலியில் இணையவசதி இல்லாமல், புகைப்படங்கள் மற்றும் காணொளிகளை பகிரும் வசதியை மெட்டா நிறுவனம் தற்போது அறிமுகப்படுத்தியுள்ளது.

வட்ஸ்அப் செயலியானது அதன் தளத்தை All in One சேவைகளுக்கான மையமாக மாற்றியமைக்கும் திட்டத்தில் மற்றுமொரு அம்சமாகவே இந்த புதிய வசதி அறிமுகம் செய்யப்படவுள்ளது.

அண்மையில் செயற்கை நுண்ணறிவு (AI) வசதியை அறிமுகம் செய்துள்ள வட்ஸ்அப் செயலி, தற்போது இணையம் இல்லாமல் புகைப்படங்கள் மற்றும் காணொளிகளை மற்றவர்களுடன் பகிரும் வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது.

இணையவசதி இல்லாமல், புளூடூத் உதவியுடன் Share it மற்றும் Near By Share போன்ற செயலிகள் மூலம் புகைப்படங்கள் மற்றும் திரைப்படங்களை அனுப்ப முடியும்.

அந்தவகையில் இப்போது வட்ஸ்அப் செயலியும் இந்த சேவைகளை வழங்குகிறது.

அத்துடன், ஆவணங்களை விரைவாக, பாதுகாப்பாக அனுப்பவும் இந்த அம்சம் பயனுள்ளதாக அமையும் எனவும், இந்த அம்சத்தை செயல்படுத்த வட்ஸ்அப் பயனர்கள் WhatsApp System Files, Photo Gallery அணுகல் போன்ற அனுமதிகளை வழங்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், இந்த அம்சம் தற்போது சோதிக்கப்பட்டு வரும் நிலையில் இது விரைவில் அனைத்து WhatsApp பயனர்களுக்கும் கிடைக்கும் என மெட்டா நிறுவனம் கூறியுள்ளது.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects