மட்டக்களப்பு மாவட்டத்தின் 14 பிரதேச செயலக பிரிவுகளில் கடைமையாற்றும் அஸ்வெசும கள அதிகாரிகளுக்கு தரவினை இலத்திரனியல் மூலம் இற்றைப்படுத்துவதற்கான விசேட பயிற்சி வழங்கப்பட்டது.
இப்பயிற்சியானது மேலதிக அரசாங்க அதிபர் (காணி) நவரூபரஞ்சினி முகுந்தன் தலைமையில் மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் 25.04.2024 அன்று நடைபெற்றது.
மாவட்ட நலன்புரி நன்மைகள் பிரிவு உத்தியோகத்தர்களின் ஏற்பாட்டில் சமூக பாதுகாப்பு நிபுணர் உப்புல் பிரமானகேயினால் இப்பயிற்சி வழங்கப்பட்டது.
மேலும் துள்ளியமான தரவுகளையும், கணக்கெடுப்புக்களையும் உரிய நேரத்தில் இற்றைப்படுத்துவதன் முக்கியத்துவம் தொடர்பாக தெளிவூட்டப்பட்டது.
கிழக்கு மாகாண நலன்புரி நன்மைகள் சபையின் மேலதிக ஆணையாளர் எஸ்.கிரிதரன், உதவி பிரதேச செயலாளர்கள், கிராம சேவையாளர், பதவி நிலை உதவியாளர் எம்.ரிழா என பலர் கலந்து கொண்டனர்.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇